தொடருகிறது பெற்றோர் புறக்கணிக்கப்படும் அபாயம்.!

செவ்வாய், டிசம்பர் 12, 2017

தொடருகிறது பெற்றோர் புறக்கணிக்கப்படும் அபாயம்.!




இது நாடு முழுவதும் நாகரீகமாகி விட்ட கலாச்சாரமாகி விட்டது.
சிரமத்திற்கு மேல் சிரமத்தை மேற்கொண்டு தாய் தனது குழந்தையை பிள்ளையை பெற்றெடுக்கிறார்.
அதை தொடர்ந்து அந்த குழந்தை வளரந்து ஆளாகும் வரை சிரமத்திற்கு மேல் சிரமத்தை மேற்கொள்கின்றார் அவரது தந்தை.
இவ்வாறாக சுமப்பதிலிருந்து வளர்க்கும் வரை தாயும், தந்தையும் படும் சிரமத்திற்கு அளவே இல்லை.
ஆனால் தாய்,தந்தையர் முதுமை அடைந்து பலஹீனமானப் பிறகு அவர்களுடைய தியாகத்தை சிறிதும் சிந்;திக்காமல் அவர்களை வீட்டை விட்டே விரட்டி விடுகின்றனர் அவர்களது பிள்ளைகளில் சிலர்.
இது நாடு முழுவதும் அதிகரித்து விட்டாலும் பாஜக ஆளும் மத்தியபிரதேசத்தில் இதன் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அதனால் அரசாங்கத்தில் பணிபுரிவோர் இது போன்ற மாபாதக செயலை செய்தால் அவர்களுடைய சம்பளத்திலிருந்து 10 ஆயிரத்தைப் பிடித்து அதை கைவிடப்பட்ட பெற்றோருக்கு வழங்குவது என்று அரசு முடிவு செய்துள்ளது.
அரசு சாராத நிறுவனங்களில் பணி புரிவோர், சொந்த தொழில் செய்வோhர் போன்றவர்கள் பெற்றோரை கை விட்டால் அவர்களுக்கு என்ன அபராதம் பதில் சொல்லுமா மத்திய பிரதேச அரசாங்கம்?
அரசாங்கத்தில் பணிபுரிவோர் மிக குறைவு தான். அதனால் இந்த முயற்சி அனைத்து பெற்றோருக்கும் உதவாது.
இஸ்லாம் கூறும் பெற்றோரை பேணுதல் சட்டமே அனைத்து சாராரையும் கட்டுப்படுத்தும். இது இறைவைனின் சட்டம் இதை அணைத்து நாடுகளும் பின்பற்றினால் பெற்றோர் விரட்டப்பட மாட்டார்கள்.
முதியோர் ஆதரவற்றோர் இல்லாம் தேவை இருக்காது.

'என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!  'சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக! 
அல்குர்ஆன் 17:23,24

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலிலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. 
அல்குர்ஆன் 31:14

நான் நபி (ஸல்) அவர்கüடம், 'அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், 'உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள். 'பிறகு எது?'' என்று கேட்டேன். 'தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். 'பிறகு எது?'' என்றேன். அவர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்று  பதிலüத்தார்கள். இ(ம் மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாக பதிலüத்திருப்பார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல் : புகாரீ 527.

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதருயைட இந்த அழகிய உபதேசங்களும், கட்டளைகளும் மனிதனை சென்றடைந்தால் பெற்றோர் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகாது.