தொடருகிறது பெற்றோர் புறக்கணிக்கப்படும் அபாயம்.!

திங்கள், அக்டோபர் 03, 2011

(4) இவ்வுல வாழ்வில்


ஏகஇறைவனின் திருப்பெயரால்...


وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ {15}

31:15. உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். இவ்வுலக வாழ்க்கையில் !!




இவ்வுலகில் 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பாசத்தைப பிழிந்துப் பிழிந்து ஒத்தடம் தந்த உறவுகள் தான் தாய் தந்தை உறவு  இதற்கு முந்தைய அனைத்துக் கட்டுரைகளிலும் அந்த உறவுகள் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.

ஜிஹாது செய்வதைவிட வயதான தாய், தந்தையரை பராமரிப்பதுவே சிறந்தது என்பதையும் பார்த்தோம் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் நம்மை இறைவனுக்கு இணைவைக்கத் தூண்டினால் அதை பகிரங்கமாகப் புறக்கனித்து விடவேண்டும்.

31:15. உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே!

அவர்கள்  இணைவைப்பில் மிகப் பிடிப்புடன் இருந்தால்  அவர்களைப் புறக்கனித்து விடமுடியாது ! அவர்களுக்குரிய தேவையை கணிவுடன் செய்தேயாக வேண்டும். அவர்கள் இணைவைப்பில் இருக்கிறார்கள் அதனால் அவர்களைப் புறக்கனிக்கிறேன் என்றுக் கூறி அவர்களை வெளியேற்றிடவோ அல்லது அவர்களை விட்டு நாம் வெளியேறிடவோ முடியாது .

காரணம் அவர்கள் இறைவனுக்கு இணைவைக்கக் கூறினால் மறுத்து விடு என்று இறைவன் கூறும் அதே வசனத்தில் அவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் படி அடுத்தப் பாராவில் கூறுவதால் அவரக்ளைப் புறக்கனிக்கும் முடிவுக்கு வந்து விடக் கூடாது. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! 31:15.

மாறாக அவர்களுடைய இணைவைப்புக் கொள்கையை மட்டும் விட்டு விட வேண்டும் அழிகிய முறையில் அவர்களுக்கு அதை தவறென்று விளக்கிக் கொண்டிருக்க வேண்டும் நாம் அதில் சாய்நது விடக் கூடாது. 


மக்கள்  தொன்று தொட்டுக் காலமாக சங்கிலித் தொடர் போன்று அல்லாஹ்வுக்கு இணைவைப்போராக ஆவதற்கு முக்கியக் காரணமாக  அமைவது தாய், தந்தையருடைய இணைவைப்பு கொள்கையை பிள்ளைகள் தொடர்வதேயாகும். 

''அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ''எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? 5:104.

என்று அல்லாஹ் கூறுவதால் ஒவ்வொரு மனிதனும் மார்க்கத்தை படித்து விட்டு கடவுள் கொள்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் மறுமையில் இது விஷயத்தில் தன் பெற்றோரையோ, மூதாதையரையோ பொறுப்பு சாட்ட முடியாது.

நாகூர் தர்ஹாவில் சென்று பிரார்த்தனை செய்தால் அவரிடம் முறையிட்டால் அவர் அல்லாஹ்விடம் எடுத்துரைத்து பிழைகள் பொறுக்கவும், இறையருள் கிடைக்கவும் மன்றாடுவார் என்று என் தந்தைக் கூறினார் அதனால் அங்கு சென்று முறையிட்டேன், அவ்லியாக்கள் பெயரில் மவ்லூது ஓதினால்  அபிவிருத்தி ஏற்படும் என்று தந்தைக் கூறினார் அதனால் மவ்லூது ஓதினேன் என்று மறுமையில் அல்லாஹ்விடம் கூற முடியாது தாய், தந்தையரை பொறுப்பு சாட்ட முடியாது அவ்வாறு சாட்டினாலும் கூட அதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் காரணம் அங்கு அவர்களை காத்துக் கொள்வதே பெரும்பாடாக இருக்கும். 


அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். திருக்குர்ஆன் 80: 33, 34, 35, 36. 26

ஒருவன் செய்யக் கூடிய தவறுக்கு அங்கு பதிலளிக்க அவனே முழுப் பொறுப்பாளியாவான் யார் மீதும் தனது குற்றத்தை சுமத்த முடியாது. உலகில் ஒருவன் தவறு செய்வதற்கு உண்மையில் அவனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் காரணமாக இருந்தாலும் அதை அங்குக் கூறமுடியாது கூறினாலும் அது எடுபடாது. என்பதை மேற்கானும் திருமறை வசனம்  எச்சரிப்பதை விளங்கிக் கொண்டு ஏகஇறைவனை வழிபடும் விஷயத்தில் தாய், தந்தை குறுக்கிட்டால் அதை பகிரங்கமாக புறக்கனிக்க வேண்டும் அல்லாஹ்வை மட்டும்  அவனுக்கு இணை,துணை கற்பிக்காமல் தூய வணக்கத்தை செலுத்த வேண்டும்.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை1 அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம். 31:33




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்