தொடருகிறது பெற்றோர் புறக்கணிக்கப்படும் அபாயம்.!

திங்கள், அக்டோபர் 03, 2011

(2) தந்தையின் அந்தஸ்து



وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும்உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்  31:14.




தந்தையின் அந்தஸ்து



இதற்கு முந்தைய நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தந்தையை விட தாயின் அந்தஸ்தை பல மடங்கு உயர்த்திக்கூறி இருந்ததைப் பார்த்தோம்,

தாய் தனது குழந்தையை கருவறையில் சுமந்த அந்தப் பத்து மாத காலம் என்பதுவேதனையும்சோதனையும் நிறைந்த காலமாகும் அக்காலத்தில் அவர்கள் உடல் ரீதியாக படும் துன்பம் சொல்லில் அடங்காததும்எழுத்தில் வடிக்க முடியாததுமாகும்அதனால் தான் அந்த வேதனையை அல்லாஹ் பலவீனத்துக்கு மேல் பலவீனம் என்று சுட்டிக்காட்டினான். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்.

இந்த சிரமம் தாயுடன் மட்டும் முடிவதில்லை மாறாக தந்தையும் அனுபவிப்பார். தாய் குழந்தையை தனது கருவறையில் சுமந்த காலத்தில் தந்தை தனது உள்ளத்தில் சுமப்பார், தாய் உடல் ரீதியாக வேதனையை அனுபவிப்பார் தந்தை மன ரீதியாக வேதனையை அனுபவிப்பார். தாய் பத்து மாதங்கள் முடிந்ததும் சுமையை இறக்கி வைத்து விடுவார், தந்தையால் இறக்கி வைக்க முடியாது ஒருமுறை உள்ளத்தில் சுமந்தது சுமந்தது தான். வாழ்நாள் முழுதும் சுமந்து கொண்டிருப்பார்.

வீட்டை விட்டு வெளியே சென்ற மகன் மீண்டும் வீடு திரும்பும் வரை (உள்ளத்தில் சுமந்திருப்பதால்) தந்தையின் உள்ளம் பதை பதைத்துக் கொண்டிருக்கும். இதில் வெளிநாட்டிற்கு வறுமைக்காக வருடக் கணக்கில் அனுப்புகின்ற அவரது உள்ளம் துடியாய் துடித்துக் கொண்டிருக்கும். 

உள்ளத்தில் சுமந்திருப்பதால் உள்ளம் நோகும் அளவுக்கு அவன் நடந்தால் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை ?

தந்தையால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மகனுடைய நடைமுறை அமையும் பொழுது அதற்காக அவர் வருத்தப்படுகிறார்வேதனைப்படுகிறார் அதுவே நாளடைவில் கடும் கோபமாக மாறுகிறது. இதனால் இறைவனும் அந்த நன்றி கெட்ட மகனின் மீது கோபம் கொள்கிறான் என்று இறைவனின் இறுதி தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது. இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதீ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அமர்(ரலி) அவர்கள்.


தலை குணிவு.

  • ஒரு காலத்தில் தந்தை செல்வ சீமானாக வாழ்ந்திருப்பார் பட்டி தொட்டிபதினெட்டு கிராமத்துக்கும் பஞ்சாயத்துத் தலைவராக இருந்திருப்பார்.
  • மகன் தருதலையாக உருவெடுத்து விட்டால் செல்வ சீமான் செல்லாக்காசாகி விடுவார்
  •  பஞ்சாயத்து தலைவர் பிற பஞசாயத்தார் முன்னிலையில் தலை குணிந்திடுவார்.
  • ஆனாலும் அவர் இவனை உள்ளத்தில் சுமந்திருப்பதால் கைவிடமாட்டார்.
  • ஆனால் இவன் அவரைக் கைவிட்டு விடுவான்.  

ஒரு காலத்தில் இவன் சிறுவனாக, வாலிபனாக இருக்கும்போது விலை உயர்வான உடை மற்றும் வாகனங்களைத் தான் தேர்வு செய்வான் அதை அவர் சிரமத்தை மேற்கொண்டு வாங்கி கொடுப்பார்ருசிகரமான உணவு செய்ய வில்லையென்றால் கூடத்திலிருந்து சாப்பாட்டு தட்டு சமையலறையை நோக்கிப் பறக்கும்.

இவ்வாறு தனது தாய் தந்தையரிடமிருந்து எல்லா வகைகளிலும் உயர்வானதை உரிமையுடன் அடைந்து கொண்டவன் அவர்களுடைய முதுமையில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சிறிய அளவிலான உணவுவிலை கம்மியான உடைகள் வீட்டில் ஒரு ஓரத்தில் சிறிய இடம் போன்றவைகளை உரிமையுடன் செய்து கொடுக்க மறுக்கின்றான்.  

இதனால் நன்றி விசுவாசம் இல்லாதவனாக பெற்றெடுத்தவர்களுக்கு மட்டும் மாறவில்லை மாறாக தன்னைப் படைத்த இறைவனுக்கும் நன்றி மறந்தவனாகிறான் என்று இறைவன் கூறுகிறான.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.  எனக்கும்உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்  31:14.

நடைமுறைக்கு ஏற்ற மார்க்கம் தான் இஸ்லாம் என்பதற்கு இஸ்லாம் தாய் தந்தையர் மீது பிள்ளைகளக்கு கடமையாக்கிய கட்டளைகள் மிகப் பெரிய உதாரணமாகும். 

வயதான காலத்தில் தாய்,தந்தையருக்கு பிள்ளைகள் செய்யும் பணிவிடை மூலமாகவே இறைவனின் திருப்தியை அடைந்து கொள்ள முடியும் என்றுக் கூறி முரண்டுப் பிடிக்கும் மனிதனுக்கு மூக்கானாங் கயிறை மாட்டி விட்டது இஸ்லாம்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: