தொடருகிறது பெற்றோர் புறக்கணிக்கப்படும் அபாயம்.!

திங்கள், அக்டோபர் 03, 2011

(1) தாயின் சிறப்பு





وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ 
كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ  أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا {23} وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

''
என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! 


அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 251 ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக! அல்குர்ஆன்: 17.23,24
----------------------------------------------------------------------------------------------------------------------
அவர்களை ச்சீ என்று (கூட) சொல்ல வேண்டாம். 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்காக முதுமையடைந்த நம்முடைய தாய்தந்தையர் மீது கோபம் கொள்வோம். கோபத்தின் வழியாகத்தான் ஷைத்தான் மனிதனை தன்பால் வயப்படுத்துகிறான். கோபத்தின் வாயிலைத் திறந்துவிட்டால் அனைத்து வெறுக்கத்தக்க வார்த்தைகளும் நாவினுல் ஊடுருவிக்கொள்கிறது. அதன் பின் ச்சீ  என்றும் போ என்றும் இன்னும் எவற்றையெல்லாமோப் பேச வேண்டிய நிலையும் உருவாகி விடுகிறது.

வயதான காலத்தில் தாய்,தந்தையர் எதையாவது நம்மைப் பேசி விட்டாலும் அல்லது வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டாலும் அவைகளைப் பொருட்படுத்தாமல் விடுவதே சிறந்ததாகும்.

காரணம் நாம் சிறுவர்களாக இருந்தபொழுது என்னவெல்லாமோ அவர்களைப் பேசி இருப்போம் வெறுக்கத்தக்க வகையில் நடந்திருப்போம் அவைகளை அவர்கள் சிறு பிள்ளைத்தானே என்றுஅல்லது நம் பிள்ளைத்தானே என்று பொருட்படுத்தாமல் விட்டிருப்பார்கள்.

அதுபோல் நாமும் அவர்களை அவர்களுடைய வயதான காலத்தில்  அவர்கள் நா தடுமாறிப் பேசுவதை அல்லது வெறுக்கத்தக்க முறையில் நடந்துகொள்வதை வயதானவர்களாயிற்றே அல்லது நம் தாய்தந்தையராயிற்றே என்று பொருட்படுத்தாமல் விட்டு விட வேண்டும்.

காரணம் முதுமையில் அவர்களுடைய அறிவாற்றல் சற்றே செயல்திறன் குன்றிப் போயிருக்கும். அப்பொழுது அவர்கள் ஏறத்தாழ குழந்தையைப்போல் ஆகி விடுவர் அதனால் திடகாத்திரமாக இருக்கும் நாம் அவற்றை சகித்துக் கொள்ளவேண்டும்.

கோபத்தில் அவர்களை எதையாவதுப் பேசிவிட்டோமானால் மீண்டும் நம்மை எதிர்த்துப்பேசும் திடகாத்திர நிலை அவர்களிடம் இல்லாததால் மனம் தளர்ந்து விடுவார்கள் மனம் தளருவது மனஅழுத்தத்தை உருவாக்கும் மனஅழுத்தம் இரத்த அழுத்தம்நீரிழிவுப் போன்ற நோய்களை அதிகப்படுத்தும். அல்லாஹ்வின் கட்டளையை மீறிய துர்பாக்கிய நிலைக்கும் தள்ளப்படுவோம்.

மேலும் அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்ட வேண்டாம். . .



வயதான தன் தாய்தந்தையரை விரட்டி விடும் எத்தனையோப் பேரை இன்று நாம் கண்டு வருகிறோம். இது இப்பொழுது மிக சாதாரணமாக நடந்து வரும் ஒன்றாகும். தனக்குத் திருமனம் ஆகும் வரை எந்த நிலையிலும் தனது தாய்தந்தையரைப் விட்டுப்பிரியாதவர்கள் தாய்தந்தையே கெதி என அவர்கள் கையை எதிர்பார்தது காத்திருந்தவர்கள் திருமனத்திற்குப் பின் அல்லது தான் செல்வ நிலையை அடைந்த பின் தனது நிலையை மாற்றிக் கொள்கின்றனர்.  


இது தாய்தந்தை விஷயத்தில் மட்டுமல்லாது சகோதரசகோதரிகளுடைய விஷயத்திலும் கூட இவர்களுடைய நிலை மாறுவதைக் கண்டு வருகிறோம்.

அவர்களை விரட்டுவதன் மூலம் அல்லது அவர்களை நிர்க்கதியாக விட்டு விட்டு இடம் பெயர்ந்து விடுவதன் மூலம் அவர்கள் இரண்டு பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒன்று தங்களது மகளிடம் அடைக்கலம் புகுகிறார்கள் அல்லது முதியோர் (அனாதை) இல்லம்.

வேலைக்காரி எஜமானியைப் பெற்றெடுப்பாள் ! (முஸ்லீம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த உலக முடிவுக்கு முன் நடக்கும் 10 அதிசயங்களில் ஒன்று மகள் தன் தாயை பெற்றெடுப்பாள் என்பதாகும். இதன் அர்த்தம் இறுதி காலத்தில் தாய் தனது மகளுக்கு சேவகம் செய்து உண்டு வாழ்நாளை கழிப்பதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் மேற்காணும் விதம் கூறினார்கள்.

உதாரணத்திற்கு தாய் திடகாத்திரமாக இருக்கும் போது மகளை வேலை வாங்குவார்கள் இதே தாய் வயதான காலத்தில் தன் மகனால் கைவிடப் பட்டப் பின் தன் மகளிடம் வேலைக்காரியாக மாறிவிடுவார்கள் மகள் தன் தாயை வேலை வாங்குவாள் இதைத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வேலைக்காரி எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.

இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம் பெற்ற மகளிடம் தானே உண்ணுகிறார்கள் அது எப்படி சேவகம் என்ற அடிப்படையில் வரும் என்பதாகும் அல்லாஹ் மகன்களை தான் முதுமையடைந்த தாய்தந்தையரை கவனிக்கச் சொல்கிறான்மகளை அல்ல!

கணவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சேவகம் செய்து தான் மனைவி உண்ணுகிறாள் இந்நிலையில் தனது தாய்தந்தையருக்கு வள் எப்படி இருக்க வைத்து உணவு கொடுக்கமுடியும். அதனால் தாயிடம் வேலை வாங்கிக்கொண்டு தான் அவர்களுக்கு உணவுஉடை கொடுக்க முடியும்,

தாய்க்கு நிகரில்லை
ஓர் ஏழைப் பெண் தன்னுடைய இரு பெண் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டுஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டுசென்றார். அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக் குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந் தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவருடைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஆகவேஅவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்'. அல்லது "அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்என்று சொன்னார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.. முஸ்லிம்: 5126

பிள்ளைகளுக்கு ஏற்கனவே ஒரு பழம் வீதம் கொடுத்து விட்டதால் மீதமுள்ள  ஒருப் பழத்தை அப்பெண் சாப்பிட்டிருக்க முடியும். ஆனாலும் ஏற்கனவே அப்பிள்ளைகளுக்குக் கொடுத்த ஒருப்பழம் போதாது என்பதால் அப்பிள்ளைகள் கேட்டதும் அதையும் கொடுத்து விட்டு ஒட்டிய வயிறுடன் வீடு திரும்பி விடுகிறார்.

மேற்கானும் சம்பவம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில்  நடந்த ஒரு நிகழ்வாகும்  அக்காலத்தோடு இந்நிலை முடிவடைந்து விட வில்லை இந்த வறுமை நிலை இன்றுவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றதுஇன்று அரபு நாடுகளுக்கு வந்து பொருளீட்டி குபேரர்களாக வாழும் நம்மில் பலர் மேற்கானும் தாய்தந்தையரின் தியாகத்திலிருந்து வளர்ந்து வந்தவர்களாகப் பெரும்பாலோர் இருப்பர். ஆனாலும் அதில் பலர் புதிய உறவின் (மனைவி) வரவாலும்புதிய பொருளாதார வரவாலும் பழையவைகள் மறக்கடிக்கப்பட்டுவறுமையில் வளர்த்த தாய்தந்தையரை மறக்கும்  நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

பலவீனத்துக்கு மேல் பலவீனம்
கர்ப்ப காலத்தில் பத்து மாதம் வரை ஒரே மாதிரியான துன்பத்தை தாய் அனுபவிப்பதில்லைமாறாக பலமாதிரியான துன்பங்களைஅனுபவிப்பார்கள்.

  • ஊன்உறக்கத்தை இழப்பார்கள்
  • அதிகமான  மயக்கத்திற்குள்ளாவார்கள்,
  • பிரசவிக்கும்போது கடுமையான வலியால் துடிப்பார்கள்,
  • இத்துடன் நாம் இந்த துனியாவிலிருந்து விடைபெறப் போகிறோம் எனும் அளவுக்கு வேதனையை  உணருவார்கள்
  •  மரணத்தின் விளிம்பிற்ககேச் சென்றுத் திரும்புவார்கள்இதில் பல தாய்மார்கள் திரும்பாலும் சென்றிருக்கின்றனர்.

அதனால் தான் அல்லாஹ் தன் திருமறையில் அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள் என்றுக்கூறுகிறான்.

நன்றி செலுத்துவாயாக !
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வரியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.314 எனக்கும்உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு அல்குர்ஆன் .31:14.

நாம் படைக்கப்பட்டதற்காக படைப்பாளன் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகள் மூலமாக நன்றி செலுத்த வேண்டும்.   

நம்மை சுமந்து பெற்று வளர்த்த தாய்தந்தையருக்கு பணிவிடை மூலம் நன்றி செலுத்த வேண்டும்.

இன்று மனிதர்களில் பொரும்பாலோர் படைப்பாளன் அல்லாஹ்வுக்கே நன்றி செலுத்துவதில் பின் தங்கி உள்ளனர் அதனால் பெற்றோருக்கு நன்றி செலுத்துவதிலும் அதிகம் பின் தங்கியே உள்ளனர் என்பது மிகவும் வருத்தத்திறகுரிய விஷயமாகும்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை: